Monthly Rasi Palan (மாத ராசிபலன்) – இந்த மாத ராசி பலன் என்ன என்பதை பார்க்கலாம். பலன்கள் ஒவ்வொரு மதமும் மாறுபடும். அது ஒவ்வொரு ராசிக்கு தகுந்த மாதிரி மாறுபடுகிறது. 12 ராசிகளுக்கும் இந்த மாத ராசி பலனை பற்றி பார்க்கலாம்.
Aries Monthly Rasi Palan (மேஷ ராசிபலன்)
மேஷ ராசி அன்பர்களுக்கு இந்த மாதம் நல்ல கரிய அனுகூலமான நாளாக இருக்க போகிறது. குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர்களால் மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும். பணவரவும் நன்றாக இருக்கும். அதே சமயத்தில் செலவும் உண்டாகும். கணவன் மனைவி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
ஆடம்பரமாக வாழுவீர்கள். வேலை காரணமாக கணவன் மனைவி பிரிந்து சேருவார்கள். சக ஊழியர்களிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு அலுவலகத்தில் பணி உயர்வு கிடைக்கும்.
Taurus Monthly Rasi Palan (ரிஷப ராசிபலன்)
குடும்பத்தில் உள்ளவர்களால் பக்கத்துக்கு வீட்டுக்காரர்களும் சிறு சிறு பிரச்சனைகள் வரக்கூடும். இந்த மாதத்தில் நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு எதையும் சமாளிக்கும் மன உறுதி அதிகரிக்கும். இந்த மாதம் நீங்கள் புதிய வீடு மற்றும் ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வரவால் செலவுகள் ஏற்படும். உங்களுக்கு இந்த மாதம் செல்வாக்கும் கௌரவமும் அதிகரிக்கும். பிரிந்த கணவன் மனைவி சேருவதற்கு வாய்ப்புண்டு. அலுவலகத்தில் நீண்டநாள் காத்திருந்த பதவி உயர்வு கிடைக்கும்.
Gemini Monthly Rasi Palan (மிதுன ராசிபலன்)
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இந்த மாதம் பணவரவு அதிகமாக இருக்கும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியம். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க கூடும். தனிப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும். வீட்டில் பொன் பொருள் சேரும் வாய்ப்புகள் உண்டாகும். தந்தையுடன் இருந்த கருது வேறுபாடுகள் மறையும்.
குடும்பத்தில் பெரியவர்கள் ஆலோசனை கேட்டு செய்வது நல்லது. அலுவலகத்தில் அவர்கள் விரும்பியபடி இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். பெண்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
Cancer Monthly Rasi Palan (கடக ராசிபலன்)
பணவரவு அதிகரிக்கும். உறவினர்களிடம் நல்ல பெயர் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். மனதில் நல்ல உற்சாகம் உண்டாகும். இடையூறுகள் மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
மகிழ்ச்சியான சில செலவுகள் வர வாய்ப்புள்ளது. எதிர்பாராத காரியங்கள் நடந்து முடியும். வழக்குகள் சாதகமானதாக நடந்து முடியும். அலுவலகத்தில் உற்சாகமாக பணி செய்வீர்கள். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
Leo Monthly Rasi Palan (சிம்ம ராசிபலன்)
தடைகளை முறியடித்து சாதனைகளை படைப்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். சாதகமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் ஆடம்பர வசதிகள் பெருகும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் மறையும். சகோதரர்களால் காரியங்கள் நிறைவேறும்.
அலுவலகத்தில் சற்று வேலை அதிகமாக இருக்கும். இதனால் நீங்கள் சிரமத்திற்கு உள்ளாவீர்கள். வியாபாரத்தில் சற்று மந்தமான நிலைமை ஏற்படும். புதிதாக முதலீடு செய்யும் விஷயத்தில் நீங்கள் நல்ல யோசித்து பின்பு முடிவு எடுக்க வேண்டும்.
Virgo Monthly Rasi Palan (கன்னி ராசிபலன்)
நீண்ட நாள் கனவு நிறைவேறும். தொடங்கிய காரியம் நல்லதாக முடியும். எதிரிகள் உங்களிடம் பணிவாக நடந்து கொள்ளுவார்கள். உங்கள் முயற்சிகள் வெற்றி அடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தையுடன் கருது வேறுபாடு வர வாய்புள்ளதால் சற்று அமைதியாக இருக்க வேண்டும்.
பண வரவு அதிகமாக இருக்கும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பிரச்சனைகள் வரும் ஆனால் அது பெரிய பாதிப்பை தராது.
Libra Monthly Rasi Palan (துலாம் ராசிபலன்)
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். பணவரவு நன்றாக இருக்கும். சில பிரச்சனைகள் செலவுகளை ஏற்படுத்தும். எதையும் சற்று பொறுமையுடன் கையாள்வது நல்லது. கணவன் மனைவி இடையே சில சில சண்டைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.
புதிய வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் உண்டாக்கும். சக ஊழியர்களுடன் கருது வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் மற்றும் முதலீடுகளை தவிர்க்கவும். கணவரின் அன்பும் ஆதரவும் மனைவிக்கு நல்ல மகிழ்ச்சியை தரும்.
Scorpio Monthly Rasi Palan (விருச்சகம் ராசிபலன்)
தொடங்கும் காரியங்கள் வெற்றி கரமாக முடியும். அரசாங்க காரியங்கள் இழுபறி ஆனாலும் கடைசியில் சாதகமாக முடியும். தூரத்தில் இருந்து நல்ல மகிழ்ச்சியான செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவி இடையே கருது வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனைகள் உடனே தீர்ந்து விடும்.
உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவுகளால் நல்ல அனுகூலம் ஏற்படும். சகோதர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். அதிகாரிகள் கண்டிப்பு காட்டினாலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. சுய தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது.
Sagittarius Monthly Rai Palan (தனுசு ராசிபலன்)
எடுத்த காரியங்கள் வெற்றி கரமாக முடியும். சுபகாரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. பணவரவு அதிகமாக இருக்கும். கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. பின்னர் அந்த பிரச்சனைகள் தீரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நல்ல விதமாக நடந்து கொள்ளுவார்கள். தந்தையின் மூலம் பணவரவு உண்டாகும். வியாபாரம் நன்றாக நடக்கும். நல்ல பணவரவு உண்டாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
Capricorn Monthly Rasi Palan (மகரம் ராசிபலன்)
மகர ராசி அன்பர்களே, பெரியோர்களை ஆதரவும் அன்பும் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் தேவைகள் பூர்த்தி ஆகும். பொன் மற்றும் பொருள்கள் சேரும். பண வரவு அதிகமாக இருக்கும்.
சகோதரர் வழியில் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு. சிலருக்கு எதிர்பாராத செலவுகள் உருவாகும். நண்பர்கள் உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். அலுவலகத்தில் பதவி உயர்வு ஏற்படும். பெண்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
Aquarius Monthly Rasi Palan (கும்ப ராசிபலன்)
குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். மரியாதையை அதிகரிக்கும். நீங்கள் உறவினர்களுடன் சுமுகமாக நடந்து கொள்ளுவார்கள். சிலருக்கு சுப செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பெண்களால் ஆதாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. பக்கத்தில் உள்ளவர்களால் சில நன்மைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
குடும்பத்தில் முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை முக்கியமாகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகமாக இருக்கும். தந்தையின் ஆலோசனை மிகவும் முக்கியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
வியாபாரத்தில்அதிகமான லாபம் வரும். பெண்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நல்ல மதிப்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
Pisces Monthly Rasi Palan (மீன ராசிபலன்)
பண வரவு தாராளமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராக பணவரவு கிடைக்கும். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும். புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். அது உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். அரசாங்க காரியத்த அனுகூலம் கிடைக்கும்.
உறவினர்களிடையே கருது வேறுபாடு அதிகரிக்கும். மற்றவரிடமிருந்து எதிர்பாராத உதவி கிடைக்கும். கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் தீரும். பிழைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் பணிகள் அதிகமாக இருக்கும்.
வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் பணவரவு அதிகமாக இருக்கும். பெண்களுக்கு நிம்மதியை தர கூடிய மாதமாக இருக்கும். வேலை பார்ப்பவர்களுக்கு இருந்த பணிச்சுமை தீரும்.
Read More: Tomorrow Rasi Palan
Leave a Reply